கொரோனா: காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த நபருக்கு தொற்று! காவலருக்கும் பரிசோதனை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை
uslampatti

உசிலம்பட்டி அருகே காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி காவல் நிலையத்திற்கு கடந்த ஜூன் 20ஆம் தேதி இளைஞர் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக புகார் அளிக்க வந்த அவர், காவல் நிலையத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக புகார் குறித்த விசாரணைக்காக காத்திருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த இளைஞர் பரவை மார்க்கெடில் பணியாற்றியதாகவும், காவல் நிலையம் வந்து சென்ற அடுத்த நாள் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு புகார்களை வாசலில் நின்றே பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் விசாரணைகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டது.

இதனிடையே காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு காவல் ஆய்வாளர் , 3 எஸ்.ஐ மற்றும் 17 காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.