கர்ப்பமான 9 ஆம் வகுப்பு மாணவி! துரத்தி துரத்தி காதலித்த கல்லூரி மாணவர் கைது!

கிரைம் நியூஸ் தமிழகம்
pragnant

விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பம் ஆக்கிய கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராக்கெட் மூலம் தாலுகாவிற்கு உட்பட்ட ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் அன்புதாசன். இவர் அங்குள்ள அரசு உறுப்பு கல்லூரியில் மூன்றாமாண்டு பி.ஏ வருகிறார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை பின்தொடர்ந்து காதல் தொல்லை அளித்து வந்துள்ளார். ஒருக்கட்டத்தில் அந்த மாணவிக்கு ஆசை வார்த்தைக் கூறி காதலிக்க வைத்தார்.

இதனால் அவர்கள் இருவரும் மிக நெருக்கமாக பழகி உள்ளனர். இதனை பயன்படுத்தி அவ்வப்போது தனிமையான இடத்திற்கு மாணவியை அழைத்துச் சென்று அன்புதாசன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவி கர்ப்பம் ஆகியுள்ளார்.

ஒரு கட்டத்தில் மாணவி கர்ப்பமாக இருக்கும் விவரம் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.

இதனையடுத்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.