நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல்ற 28ம்தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கருணாகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் மெத்தனப்போக்கு அல்லது முறைகேடுகள், எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம், முறைகேடுகள் குறித்து புகார்கள் வந்துள்ளன. எனவே நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் கூட்டம் வருகிற 28ம்தேதி அன்று பிற்பகல் 4 மணியளவில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.
Popular Categories



