உடலை ஒப்படைக்க கொரோனா முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டாம்: மத்திய சுகாதாரத் துறை!

இந்தியா லைஃப் ஸ்டைல்
corono dead body

கொரோனா பாதித்தவர் என்று சந்தேகிக்கப்படுபவரின் உடலை ஒப்படைக்க, கொரோனா முடிவுக்காகக் காத்திருக்க வேண்டாம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதே சமயம், அந்த உடல், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டே நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவுறுத்தல் கடிதத்தை, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் ஒரு நோயாளி மரணம் அடைந்தால், அந்த உடலுக்கு கொரோனா பரிசோதனை செய்து, முடிவு வரும், உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல், காலதாமதம் செய்வதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறையின் சுகாதார சேவைகள் பொது இயக்குநர் டாக்டர் ராஜீவ் கார்க் அனுப்பியிருக்கும் கடிதத்தில், கரோனா தொற்று பாதித்தவர் என்று சந்தேகிக்கப்படும் நோயாளியின் உடலை, உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். கொரோனா பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்க வேண்டாம்.

அதே சமயம், உடல்களைக் கையாள்வதற்கான மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அந்த உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.