
சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – பகுதி 2
தெலுங்கில்- பி.எஸ் சர்மா
தமிழில்- ராஜி ரகுநாதன்
கூப கனன நியாயம் – வீடு பற்றி எரியும் போது கிணறு தோண்டுவது போல…!
கூப: – என்றால் கிணறு. கனனம் – என்றால் தோண்டுவது. வீடு பற்றி எரிகிறது. தீயை அணைப்பதற்கு நீர் வேண்டும். ஒரு புத்திசாலி தண்ணீருக்காக கிணறு தோண்டத் தொங்கினானாம்.
எந்த விஷயமானாலும் அது குறித்த முன் யோசனை வேண்டும் என்பதை நையாண்டியாகக் கூறும் சமஸ்கிருத நியாயம் இது.
நீதி சதகத்தில் உள்ள ஒரு சுலோகம் இதே கருத்தை தெரிவிக்கிறது.
சிந்தநீயா ஹி விபதாம் ஆதாவேவ ப்ரதிக்ரியா |
ந கூபகனனம் யுக்தம் ப்ரதீப்தே வஹ்னினா க்ருஹே || (ஆர்ய தர்மம்)
பொருள்- ஒரு வேலையைத் தொடங்கும் போதே எதிர்ப்படக் கூடிய தடைகள் குறித்து முன்பாகவே யூகித்து, அவற்றை எவ்வாறு கடப்பது என்று யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு தடைகள் நேர்ந்தபின்பு யோசிக்கத் தொடங்குவது சரி அல்ல. வீடு பற்றி எரியும் போது அணைப்பதற்கு நீருக்காக கிணறு தோண்டத் தொடங்குவது அறிவுள்ள பணியல்ல.
ஏதாவது பெரிய செயலைச் செய்ய எண்ணும் போது முழுமையான முன்யோசனை அவசியம். செய்ய வேண்டிய வேலைக்கான பட்டியலைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். யோசனை-1, யோசனை-2 என்பதாக எழுதிக் கொள்வது அறிவுள்ள செயல்.
தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் முன்னோக்குப் பார்வையோடு விளங்க வேண்டும். கடைசி நேரத்தில் அவசர அவசரமாக புத்தகத்தைத் திருப்புவதை ‘கூப கனன’ நியாயத்திற்கு உதாரணமாகக் கூறலாம்.
மின்சாரம் தடைப்படும் என்று தெரிந்தால் தீப்பெட்டி, மெழுகுவர்த்தி போன்றவற்றை முன்பாகவே எடுத்து வைத்துக் கொள்வோம். மழை நாளில் குடை எடுத்துச் செல்வோம். இவை முன்யோசனைக்கு எளிய உதாரணங்கள். திருமணம் போன்ற சுப நிகழ்வுகளின் போதும், மிகப் பெரிய அரங்க ஏற்பாட்டின் போதும் முன்யோசனையோடு திட்டமிடுவது மிகவும் தேவை.
விடுதலைக்குப் பிறகு முன்யோசனையில்லாத முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நமக்கு இராணுவத்தின் தேவையில்லை என்றெண்ணின