கொரோனா: ஒரு குடும்பத்தில் 8 பேருக்கு தொற்று!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
corono

சென்னை மதுராங்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, கொரோனா பதித்த 8 பேரும் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 5 ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை மாநகராட்சிக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

இதனைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உருவாக்கப்பட்ட மைக்ரோ திட்டத்தின் செயல்பாடுகள் பெரிய அளவில் பயன் அளித்து வருகின்றன.

மேலும், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகராட்சி சார்பில் களப்பணியாளர்களை நியமித்து வீடுகளுக்கே நேரடியாக சென்று தெர்மல் பரிசோதனை மேற்கொள்வதோடு அறிகுறிகள் குறித்து கேட்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மாநகராட்சி சார்பில் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் 143 மையங்கள், மண்டல வாரியாக 209 மையங்கள், நடமாடும் மருத்துவ குழு 85 என மொத்தம் 437 காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டும், கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். அந்தவகையில் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டபோது, மதுராந்தகம் அருகே உள்ள அருணாகுளத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதி முழுவதும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரேகுடும்பத்தை சேர்ந்த 2 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் உட்பட 8  பேரை சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.