தென்காசி மாவட்டம் கடையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பனை மரங்கள் அதிக அளவில் வெட்டிக் கடத்தப் படுகின்றன. இவற்றை அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை மீறி தினமும் நூற்றுக்கணக்கான பனைகள் வெட்டிக் கடத்தப்படுவதாக, கடையம் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அதிகாலை நேரங்களில் ஏராளமான லாரிகள் இவ்வாறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகௌம், தமிழக அரசின் சின்னமான பனையை வெட்டுவது சட்டவிரோத செயல் என்பது தெரிந்தும் வருவாய்த்துறை அலுவலர்கள் மௌனம் காப்பது ஏன்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.