மர்மமான முறையில் இறந்த பெண்! வரதட்சணை கொடுமை என சகோதரி புகார்!

இந்தியா கிரைம் நியூஸ்
mamtha

ஹரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களை 2 சகோதரிகள் திருமணம் செய்த நிலையில், அதில் ஒரு பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பிரேம்சந்த் என்பவரின் மனைவி ரஜ்னி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ரஜ்னி தற்கொலை செய்து விட்டதாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறிய நிலையில், அவர் தற்கொலை செய்யவில்லை. கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரின் சகோதரி மம்தா பரபரப்பு புகாரை காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

அதில், பிரேம்சந்துக்கும், ரஜ்னிக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில், அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் பிரேம்சந்தின் சகோதரரான பங்கஜுக்கும் எனக்கும் (மம்தா) 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

ஏற்கனவே ரஜ்னியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு பிரேம் குடும்பத்தினர் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். தொடர்ந்து அதேபோல என்னையும் துன்புறுத்தினார்கள். நான் கூட ஒருமுறை அவர்களின் கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முயன்று காப்பாற்றப்பட்டேன். இதையடுத்து சில காலமாக எனது பெற்றோர் வீட்டில் தான் வசித்து வந்தேன்.

இந்த சமயத்தில் தான் ரஜ்னி மர்மமான முறையில் இறந்துள்ளார்.. அவர் கழுத்து மற்றும் உடல் பகுதியில் காயங்கள் இருக்கிறது.. இதனால் எனது மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தார் தான் என்னுடைய சகோதரி ரஜ்னியை கொன்றுள்ளனர் என கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பிரேம்சந்த், பங்கஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.