தென்காசி கல்வி மாவட்டத்தில்… காமராஜர் பிறந்த நாள் விழா..!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
sengottai-kamaraj-function
sengottai-kamaraj-function

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காமராஜர் பிறந்தநாள் விழா மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலகங்களில் எளிய முறையில் கொண்டாடப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டார கல்வி அலுவலகத்தில் உள்ள வளாகத்தில், வட்டார கல்வி அலுவலர் மேரிகிரேஸ் ஜெபராணி காமராஜர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.