கொரோனாவால் சுருங்கிப் போன காமராஜர் பிறந்த நாள் விழா!

சற்றுமுன் திருச்சி நெல்லை மதுரை லைஃப் ஸ்டைல்
kamarajar-birthday-madurai
kamarajar-birthday-madurai

மதுரையில்… காமராஜரின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுகாங்கிரஸ் கட்சி சார்பில் சோழவந்தானில்உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் முழு உருவ சிலை உள்ளது இவரது 118 வது பிறந்த நாளை முன்னிட்டு சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் நாடார் உறவினர் முறையை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எஸ்சி பிரிவு சார்பாக பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்து சர்க்கரைப் பொங்கல் வழங்கினார் இந்நிகழ்ச்சிக்கு மாநில காங்கிரஸ் எஸ்சி பிரிவு துணைத்தலைவர் மூர்த்தி வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் முருகானந்தம் மாவட்ட எஸ் சி பிரிவு தலைவர் சங்கரபாண்டிஆகியோர் கலந்து கொண்டனர்

abhindumahasaba-balasubramanian
abhindumahasaba-balasubramanian

நாகர்கோயிலில்…

காமராஜர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் இந்துமகாசபா தலைவர் பாலசுப்பிரமணியன்.

நாகர்கோவில் பெரியவிளை சந்திப்பில் இன்று கல்விதந்தை கருமவீரர் காமராஐர் 118வது பிறந்த நாளை முன்னிட்டு அகில பாரத இந்து மகாசபா சார்பில் குமரி கிழக்கு மாவட்ட துணை தலைவர் பெரியவிளை Tகாந்தி தலைமையில் மற்றும் மாநில தலைவர் டாக்டர் த பாலசுப்பரமணியன் காமராஜர் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் சிறப்பித்தார்கள்…

உடன் இரஜக்கமங்கலம் ஒன்றிய தலைவர் தமிழ்வாணன், மண்டல இளைஞர்அணி செயலாளர் வட்டம் மணிகண்டன், 35வது வார்டு உறுப்பினர் ராஜேஷ், இரஜக்கமங்கலம் ஒன்றிய இளைஞர்அணி தலைவர் சுரேஷ், சுந்தர், காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்!

jagaveerapandian
jagaveerapandian

மயிலாடுதுறையில்…

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவருமான காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. மயிலாடுதுறையில் உள்ள காமராஜர் சிலைக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

இந்நிகழ்ச்சியில் போட்டோ குருமூர்த்தி ,சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசு சங்கஅமைப்பாளர் சிங்கார முத்துசாமி ,ஆசிரியர்கள் மன்ற மாநில செயலாளர் ஜெக மணிவாசகம், துலாக்கட்ட காவிரி பாதுகாப்பு குழு துணை தலைவர் ராஜாராமன், பொது தொழிலாளர்கள் சங்க செயலாளர் அ,அப்பர்சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். காமராஜர் பெருமைகள் குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் புகழஞ்சலி உரை செலுத்தினார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.