நாஞ்சில் விஜயன் வெளியிட்ட புகைப்படத்திற்கு வனிதா பதிலடி!

சினி நியூஸ் சினிமா
e118e8916719aa19d36a7f28abd71cc3 - 2026

அலசி ஆராய்ந்து வனிதாவின் முகத்திரையை கிழித்து வருகின்றனர்.

சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த வனிதா அதன்பின் பெரும் சர்ச்சையில் சிக்கினார் என்பதும், இதுகுறித்து அவர் காவல்நிலையம் வரை செல்ல வேண்டிய நிலை வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனது திருமணம் குறித்து கருத்து கூறிய அனைவரையும் வனிதா வெளுத்து வாங்கினார்

அதில் குறிப்பாக நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, கஸ்தூரி, சூரியா தேவி, எலிசபெத் என தன்னை பற்றி விமர்சித்த அத்தனை போரையும் வனிதா கடுமையாக திட்டி தீர்த்தார்.
வனிதாவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்க முடியாமல் எதிர்ப்பாளர்கள் திணறினார்கள் என்பதும் ஒருசிலர் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டு ஒதுங்கிவிட்டார்கள் என்பதும் ஊரறிந்த உண்மை. இருந்தும் இந்த பிரச்னை ஒரு முடிவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. அந்தவகையில் தற்ப்போது வனிதா ஆண் ஒருவருடன் சரக்கு பாட்டில்களை கையில் வந்துக்கொண்டு நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. யார் இந்த நபர்…? பீட்டர் பால் எங்கே போனார் என இணையவாசிகள் அலசி ஆராய்ந்து வனிதாவின் முகத்திரையை கிழித்து வருகின்றனர். இதை வைத்து மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், வனிதா அவர் தங்களது குடும்ப நண்பர் என கூறி அவருடன் இருக்கும் மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.