கையில் சரக்குடன் வனிதா மற்றொரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்! நாஞ்சில் விஜயன் வெளியிட்ட ட்ரைலர்!

சினி நியூஸ் சினிமா
e118e8916719aa19d36a7f28abd71cc3 - 2026

வனிதா குறித்து அடிக்கடி பேட்டிகளை கொடுத்து வந்தார்கள்

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவை கடந்த சில நாட்களாகவே பலரும் திட்டித் தீர்த்து வரும் நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சூர்யா தேவி ஆகிய இந்த இரண்டு பேர் மட்டும் தான் வனிதா குறித்து அடிக்கடி பேட்டிகளை கொடுத்து வந்தார்கள் இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவர் மீதும் வனிதாகடந்த சில காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் ஆனால் திடீரென்று இந்த சர்ச்சையில் நாஞ்சில் விஜயனை பெயரும் அடிபட்டது.

சூர்யா தேவியை பேட்டி எடுத்த நாஞ்சில் விஜயனுக்கு அவளுக்கும் உறவு இருக்கிறது. சூர்யா தேவிக்கு பின்னணியில் நாஞ்சில் விஜயன் இருக்கிறான். இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் தான் இது அத்தனையும். TRP காக தான் இதை செய்துள்ளனர். அவனும் சூர்யாவும் கொள்கிற வீடியோவும் என்னிடம் இருக்கிறது என்று சூர்யா தேவியும், நாஞ்சில் விஜயனும் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

சூர்யா தேவிக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. நான் பல வருடத்திற்கு முன்னால் அவளை சந்தித்தேன். நான் பிரபலம் என்பதால் அவர் என்ற வீடியோ எடுத்துக் கொண்டாள் என்று கூறியிருந்தார். மேலும், இனி வனிதா குறித்து பேச மாட்டேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் வனிதா, லைவ் பேட்டி ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணனை கண்ட மேனிக்கு திட்டித் தீர்த்து இருந்தார்.

பல்வேறு தரப்பிலிருந்தும் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்ததால் வனிதா தனதுட்விட்டர் முடக்கி விட்டு சென்றுவிட்டார். இருப்பினும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் வனிதா கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் நாஞ்சில் விஜயன் வனிதா வேறு ஒரு ஆணுடன் கையில் மது கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ஷாக் கொடுத்திருக்கிறார். மேலும் அந்த பதிவில் இது சும்மா டிரைலர் தான் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் நாஞ்சில் விஜயன்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.