சார்ஜ் போட்டபடி செல்போன் பார்த்து பரிதாப உயிரிழப்பு!

Published:

cellphone - 2026

சார்ஜ் போட்டபடி செல்போன் பேசிய போது இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவமானது நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி எனும் இடத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகனின் பெயர் தேவேந்திரன். தேவேந்திரனின் வயது 27. இவர் அப்பகுதியிலுள்ள செல்போன் டவர்களின் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று மதியம் தன்னுடைய செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட மின்கசிவினால் செல்போன் மூலம் அவருடைய உடலுக்குள் மின்சாரம் பாய்ந்தது‌. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை
நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது பள்ளிப்பாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img