ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மூவர் கைது! போலீஸ் அதிரடி!

இந்தியா சற்றுமுன்
jammu kasmir 1

ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா எனும் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாத கூட்டத்தை சேர்ந்தவர்கள் மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் பண்டிபோரா மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின்பேரில் போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் அங்கிருந்த பயங்கரவாத கூட்டத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த மூவரையும் கைது செய்தது பொலிஸாருக்கு வெற்றியாக அமைந்துள்ளது, ஏனென்றால் மற்ற தீவிரவாதிகளை இவர்களை வைத்து பிடித்துவிடலாம். கைது செய்யப்பட்டவர்கள் ப்ரார் குல்சார், மொஹமட் வக்கார் மற்றும் முனீர் அகமது ஷேக் ஆகியவர்கள் என அடையாளம் காணப்பட்டு காவல் நிலையத்தில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.