இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இலங்கை ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ஆகியோரை பதவி விலகுமாறு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்

இலங்கை காவல் துறை தலைவர் மற்றும் ராணுவ செயலாளரை கைது செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபட்ச, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்

தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் உளவுத் தகவல் கொடுத்திருந்தும், இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்காமல் அசிரத்தையாக இருந்ததன் காரணத்தால், மிகமோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

ஆகவே உடனடியாக காவல்துறைத் தலைவர், பாதுகாப்புச் செயலாளரை கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபட்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் முலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, பதவியை ராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், காவல் துறை தலைவருக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாதுகாப்பு செயாலளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ மற்றும் காவல் துறைத் தலைவர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோரை தமது பதவிகளை ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...