அடிப்படை உறுப்பினர் பதவியில இருந்தும் நீக்கிடுங்களேன்… ப்ளீஸ்: ஸ்டாலினிடம் கெஞ்சிய வி.பி.துரைசாமி!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம்
bjp leader murugan vp duraisamy

ஏதோ 8 வருசமா என்ன துணை பொதுச் செயலாளர்னு பதவி கொடுத்து வெச்சிருந்தீங்க… நன்றி. அப்படியே என்னை அடிப்படை உறுப்பினர் பதவில இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுடுங்க ப்ளீஸ் என்று கெஞ்சி ஒரு கடிதத்தை திமுக., கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ளார் வி.பி.துரைசாமி.

முன்னதாக, திமுக துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி, இன்று காலை பாஜக.,வில் இணைந்தார்.

முரசொலி அலுவலக மூலப் பத்திரம் தொடர்பாக, தேசிய எஸ்.சி., – எஸ்.டி., ஆணையத்தின் துணை தலைவராக இருந்த முருகன், ஆணையத்தில் ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதனால், முருகன் மீது தி.மு.க.,வினர் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

இதனிடையே தமிழக பாஜக., தலைவராக முருகன் நியமிக்கப்பட்டார். அவரை அண்மையில் திமுக., துணை பொதுச் செயலர், வி.பி.துரைசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனால் பாஜக.,வில், துரைசாமி சேரப் போவதாக நேற்றே தகவல் வெளியானது. இதற்கு ஏற்ப துரைசாமி நேற்று ஒரு டிவிக்கு அளித்த பேட்டியில் ஸ்டாலின் தன் அருகில் இருப்பவரின் சொல் கேட்டு செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதை அடுத்து, வி.பி. துரைசாமி கட்சியின் து.பொ.செ பதவியில் இருந்து நீக்கப் பட்டார். எனவே, வி.பி.துரைசாமி பாஜக.,வில் சேர்வார் என்று கூறப் பட்டது. அவர் வகித்த பதவி அந்தியூர் செல்வராஜ் எம்.பி.,க்கு வழங்கப் படுவதாக,, கட்சியின் தலைவர் ஸ்டாலின், அறிவிப்பு வெளியிட்டார்ர்.

இந்நிலைஇல் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் முருகன் தலைமையில் இன்று காலை, வி.பி. துரைசாமி பா.ஜ.க வில் இணைந்தார். அப்போது, பா.ஜ.க மூத்த தலைவர் இல கணேசன் உடன் இருந்தார்.

இதனிடையே, வி.பி. துரைசாமி, மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.

அந்தக் கடிதம்….

vpduraisamy letter - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.