திருவரங்கத்தில் இருந்து அயோத்திக்கு… ஸ்ரீராமரின் குலதெய்வ பிரசாதம்!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
srirangam namperumal prasad to ayodhya1 - 2026

ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து அயோதிக்கு ராமர் கோயில் பூமி பூஜைக்கு பட்டு வஸ்திரம் காவேரி புனித நீர் மற்றும் மரியாதை மாலைகள் அனுப்பி வைக்கப்பட்டன..

srirangam namperumal prasad to ayodhya2 - 2026

அயோத்தி ஸ்ரீ ராம ஜென்ம பூமி திருக்கோவில் பூமி பூஜையை முன்னிட்டு விஹெச்பி தென்தமிழ்நாடு சார்பாக காவேரி மற்றும் கொள்ளிடம் நதிக்கரையின் மணல், ஸ்ரீ ரங்கநாதரின் பட்டு வஸ்திரம், பிரசாதம், தீர்த்தம் ஆகியவை ரங்கநாதரின் சந்நிதியில் வைத்து பூஜிக்கப்பட்டு கோவில் பிராகார வலம் வந்து அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

srirangam namperumal prasad to ayodhya2a - 2026

இந்நிகழ்ச்சியில் விஹெச்பி தென் பாரத அமைப்பாளர் PM நாகராஜன், தென்தமிழக அமைப்பாளர் சேதுராமன், ஆர்எஸ்எஸ் திருச்சி கோட்ட தலைவர் செல்லதுரை, துவாக்குடி ஆர்எஸ்எஸ் தலைவர் வேல்முருகன் சம்பத், ஆர்எஸ்எஸ் திருச்சி கோட்ட சேவா பிரமுக் ஜம்புநாதன், விஹெச்பி மாவட்டச் செயலாளர் சசிகுமார், பிஜேபி தேசிய பொதுக்குழு உறுப்பினர் ராமசுப்பு (எ)பாலாஜி, சுதேசி ஜாக்ரன் கோட்ட அமைப்பாளர் அண்ணாமலை, கேஆர் சீனிவாச கணேசன், சுதேசி ஜாக்ரன், அனைத்து ஹிந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தனிநபர் இடைவெளி கடைபிடித்து ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் கலந்து கொண்டனர்.

srirangam namperumal prasad to ayodhya - 2026

திருவரங்கம் நம்பெருமாளின் திருக்கை சந்தனக் காப்பு, வஸ்திரம், மாலைகள் ஆகியவை கோயிலின் சார்பில் அளிக்கப் பட்டன.

goldprick for ayodhya - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.