spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்நிலையற்ற வாழ்க்கை: ஆச்சார்யாள் அருளமுதம்!

நிலையற்ற வாழ்க்கை: ஆச்சார்யாள் அருளமுதம்!

- Advertisement -
IMG 20200705 075744 468

வசிஸ்ட மகரிஷி ஒரு பெரிய தபஸ் சக்கரவர்த்தி மிகுந்த தவ வலிமை பெற்று திகழ்ந்த அவர் நந்தினி ஒரு பசுவை வைத்திருந்தால் அதன் இடத்தில் ஒருவன் எதை கேட்டாலும் கொடுக்க வல்லது விசுவாமித்திர முனிவர் அரசனாக இருந்த சமயத்தில் வசிஷ்டருடைய ஆசிரமத்தின் வழியாக செல்ல நேர்ந்தது.

வசிஷ்டர் விஸ்வமித்திரரை வரவேற்று அவருடன் வந்திருந்த பெரிய சைன்யத்திற்கும் நந்தினியை கொண்டு பெரிய விருந்தளித்தார். நந்தினியின் விசேஷமான சக்தியை அறிந்த விசுவாமித்திரர் நந்தினியை தனக்கு தருமாறு வசிஷ்டரிடம் கேட்டார். ஆனால் வசிஷ்டர் கொடுக்க மறுத்துவிட்டார்.

விஸ்வாமித்திரர் வசிஷ்டருடன் போர்புரிந்து பலவந்தமாக பசுவை கைப்பற்றிக் கொள்ள முயற்சித்தார் அவருடைய முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தன இதனால் அவமானம் பொறுக்க முடியாமல் விசுவாமித்திரர் அவ்விடத்தை விட்டு சென்று தவம் புரியத் தொடங்கினார் தவத்தின் பலனாய் அவர் பல்வேறு அஸ்திரங்களையும் கணைகளையும் பல விசேஷ சக்திகளை பெற்றார் தம் ஆற்றலை கொண்டு பெருமிதம் கொண்ட விசுவாமித்திரர் வசிஷ்டரை மீண்டும் தன்னுடன் போர் புரிய அழைத்தார்.

ஆனால் வசிஷ்டரும் எவ்வித சலனமுமின்றி தம் ஆசனத்தில் அமைதியாக வீற்றிருந்தார். வசிஷ்டரை கொன்று நந்தினி கவர்ந்து செல்வதற்காக விசுவாமித்திரர் பலவித அஸ்திரங்களை ஏவினர். வசிஸ்டர் தமது பிரம்ம தண்டத்தை எடுத்து முன் வைத்தார்.

விசுவாமித்திரர் தொடுத்த சக்திவாய்ந்த எல்லா அஸ்த்திரங்களும் பிரம்ம தண்டம் பலம் இழக்கச் செய்துவிட்டது சிறு காயமும் ஏற்படாமல் சர்வசாதாரணமாக அவர் வீற்றிருப்பதைக் கண்டு விசுவாமித்திரர் அவருடைய மகிமையை உணர்ந்தார்‌

அத்தகைய தவ வலிமையை தாம் பெற நினைத்து தமது அரண்மனையும் மற்றும் உலக ஆசைகளையும் துறந்து கடுமையான தவத்தில் ஈடுபட்டார். காலப்போக்கில் அவரும் வஷிடரை போல் மகரிஷி ஆனார்

திரிசங்கு என்னும் அரசன் தனது மானிட தேகத்துடனையே சுவர்க்கம் செல்வதற்கு விருப்பப்பட்டான் திரிசங்கு விசுவாமித்திரரிடம் தனது ஆசையை நிறைவேற்றி வைக்குமாறு கேட்டுக் கொண்டான். அவரும் தனது தவவலிமையால் திரிசங்குவை சுவர்க்கலோகத்திற்கு அனுப்பி வைத்தார் தேவர்கள் அவனின் வருகையை தடை செய்து அவனை மறுபடியும் பூலோகத்திற்கு திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

பூமியை நோக்கி திரிசங்கு கீழே விழும் தருணத்தில் காப்பாற்றுமாறு விசுவாமித்திரரிடம் கேட்டுக் கொண்டான் அவரும் அவன் கீழே விழுவதை தடுத்து நிறுத்தினார் இருந்த இடத்திலேயே திரிசங்குவிற்கு என்று தனியாக ஒரு சொர்க்கத்தை மகரிஷி சிருஷ்டித்தார்.இத்தகைய பேராற்றல் கொண்டவர் விசுவாமித்திரர்

தேவர்களும் அசுரர்களும் பலத்த போர் ஒரு சமயம் நடந்தது அசுரர்கள் எல்லோரும் கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டதால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை தேவர்கள் அகத்திய முனிவரை நாடிச்சென்று அசுரர்கள் மறைந்திருக்கும் கடலை வற்றச் செய்ய உதவவேண்டும் இச்செயல் எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது என்று கேட்டுக்கொண்டார்கள். வேண்டுகோளை ஏற்ற அகஸ்திய முனிவர் சர்வ சாதாரணமாக ஏதோ பாலை குடிப்பது போல கடல் நீரை ஒரே மூச்சில் குடித்து விட்டார். மறைத்துக் கொண்டிருந்த அசுரர்கள் வெளியே தென்பட்டதால் தேவர்கள் அவர்களை கொன்று வெற்றி வாகை சூடினார்கள்.

நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பேராற்றல் கொண்டு விளங்கிய அகத்தியர் விஸ்வாமித்திரர் வசிஷ்டர் மகரிஷிகளும் மரணத்திற்கு இலக்காகி இன்று இல்லாமல் போய்விட்டார்கள் ஆகையால் பிறவி எடுத்தவனுக்கு மரணம் என்பது தவிர்க்க முடியாதது.

பாண்டவர்கள் காட்டில் வசித்த சமயத்தில் அவர்களுக்கு தாங்க முடியாத தாகம் ஏற்பட்டது நகுலன் ஒரு மரத்தின் மீதேறி நீர்நிலை தென்படுகிறதா என சுற்றமும் தேடிப்பார்த்தான் சிறிது தொலைவில் கொக்குகள் பறப்பதையும் நீரில் வளரும் தாவரங்கள் செழித்து வளர்ந்திருப்பதையும் கண்டு அங்கே நீர்நிலை இருக்க வேண்டும் என்று தெளிந்து கொண்டான்.

நீரை கொண்டு வருமாறு யுதிஷ்டிரன் அவனை அந்த இடத்திற்கு அனுப்பி வைத்தார். தான் பார்த்த இடத்தை அடைந்தவுடன் நகுலன் ஏரி இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தான். ஆவல் மிகுதியால் நீரை எடுத்து குடிக்கப் போகும் தருணத்தில் ஒரு அசரீரி வாக்குக் கேட்டது. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நீ இந்தநீரை குடிக்க முடியாது என்று கூறியது. தாகத்தை பொறுக்க முடியாத நகுலன் அதன் வாக்கை கேட்காமல் நீரை குடித்தான் உயிர் பிரிந்ததும் சடலமாக தரையில் விழுந்தான்.

நகுலனை தேடிக்கொண்டு சகாதேவன் ஏரியை நோக்கி வந்தான் அவனும் அதே போல் புறக்கணித்து நீரை அருந்தியதால் இறந்தான். அதன் பின் அடுத்தடுத்து அர்ஜுனனும் பீமனும் நகுல சகாதேவ பின்பற்றினார்கள். கடைசியில் சகோதரர்களை தேடிக்கொண்டு வந்த யுதிஷ்டரர், ஏரியை கண்டார் அங்கு அவர் கண்ட காட்சி நெஞ்சை பதைபதைக்க செய்வதாக இருந்தது.

பெரும் பராக்கிரமசாலியான சகோதரர்கள் தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு திடுகிட்டார். சோகத்தில் இருந்த தர்மர் ஏற்கனவே தாகத்திலும் இருந்ததால் தாகத்தை தணித்துக்கொள்ள ஏரியின் நீரை எடுத்து வருகிறார். அப்பொழுது மறுபடியும் அந்த அசிரீரி நீரைக் குடிக்காதே என்னுடைய நீரை குடிக்க வேண்டுமானால் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் ஏன் இங்கே இருக்கும் நால்வரும் என் தடையை மீறியதால் பிணமாக கிடக்கிறார் என்று எச்சரித்தது.

அப்படி என்றால் தாங்கள் அனுமதியின்றி குடிக்க மாட்டேன் என்று கூறிய யுதிஷ்டிரர் கேள்விகளை கேட்கலாம் என்று கூறினார். பல்வேறு பிரிவுகளில் பல கேள்விகளை கேட்டது.கேள்விக்கெல்லாம் அற்புதமாக விடையளித்தார் யுதிஷ்டிரர்.

இவ்வுலகில் இருக்கும் மிகப்பெரிய அதிசயம் என்ன என்று கேட்ட பொழுது. தினமும் எண்ணற்ற மனிதர்கள் யம பட்டினத்தை சென்று அடைந்து கொண்டிருக்கிறார்கள் இருந்தபோதிலும் இவற்றை பார்த்துக் கொண்டிருந்து விட்டு தாங்கள் மட்டும் சுத்தமாக வாழப் போவதாக மனிதனின் நினைத்து கொண்டிருப்பதோடு அவன் எண்ணப்படியே அவர்களுடைய செயல்பாடுகள் இருக்கின்றன இதைக்காட்டிலும் பிரமிப்பு ஊட்டக் கூடிய விஷயம் ஏதாவது இருக்க முடியுமா என்று கேட்டார்.

யுதிஷ்டிரர் பதில்களை கேட்டு மனம் மகிழ்ந்து ஏரியின் நீரை குடிக்க அவரை அனுமதித்தது இறந்து போன நான்கு சகோதரர்களையும் உயிர்த்தெழ செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe