நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை!

இந்தியா சற்றுமுன் தமிழகம்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீட் விவகாரத்தில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வகுப்பு புறக்கணிப்பு சாலை மறியல் உள்ளிட்ட எந்தவித போராட்டங்களும் நடத்த கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசு சட்டம் ஒழுங்கை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் ரயில் மறியல், சாலை மறியல், வகுப்பு புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவைகளை நடத்த கூடாது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால், எதிர்க்கட்சிகளும் சில தனியார் செய்தி தொலைக்காட்சிகளும் கலக்கம் அடைந்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.