சென்னை:
சென்னை, ஆர்.கே.நகரில் ரூ.89 கோடியை வாரி இறைக்க டிடிவி தினகரன் குழு திட்டமிட்டது அம்பலம் ஆகியுள்ளது. வாக்காளர் ஒவ்வொருவருக்கும் ரூ.4 ஆயிரம் வீதம், சுமார் ரூ.89 கோடிக்கு வாக்காளர்களை விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளனர்.
நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் கசிந்துள்ளன.
இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட 6 அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.
ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணப் பட்டுவாடா செய்ய ரூ.89.65 கோடி வழங்க இருந்தது தெரிய வந்துள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான ஆவணங்களும் வெளியாகின; எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் பெயர்கள் ஆவணங்களில் உள்ளன.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 85% வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதனிடையே தேர்தல் தள்ளிப் போகுமா என்பது நாளை தெரியவரும். வருமான வரித்துறை யினர் தாங்கள் நடத்திய சோதனை குறித்து இன்று இரவு தேர்தல் ஆணையத்துக்கு தகவலை அனுப்பி வைக்கும் என்றும், அதன் அடிப்படையில் நாளை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் கூறப்படுகிறது.
வருமான வரித்துறை மூலம் கசிந்த ஆவணங்கள்:








