மகனை… ‘அன்புச் சகோதரன்’ ஆக்கிய ஸ்டாலின்! வழக்கம் போல் தலையை பிய்த்துக் கொண்ட துரைமுருகன்!

Reporters Diary அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம்

vellore stalin e1564470655666 - 2026

துரை முருகனின் அன்புச் சகோதரர் கதிர் ஆனந்த் என்று, வழக்கம் போல் உளறிக் கொட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சைக் கேட்டு, ஒரு கணம் அதிர்ந்த துரை முருகன், பின்னர் வழக்கம் போல் தலையைப் பிய்த்துக் கொண்டார்!

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் ஆக.5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில், திமுக., சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

அவருக்காக பிரசாரம் செய்து வந்தார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்! அப்போது, நிம்மியம்பட்டு பகுதியில் திறந்த வேனில் அவர் பிரசாரம் மேற்கொண்ட போது, வேலூர் தொகுதியில் திமுக., வெற்றி பெற்றால் 100 நாள் வேலைத் திட்டத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தகுதி உள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 8 ஆண்டுகளாக அதிமுக., ஆட்சியில் இருக்கிறது. அப்போது செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்காமல் தேவையற்றதை பேசி வருகிறார் எடப்பாடி. மோடியின் தயவில் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது… என்று பேசிவந்தார்.

duraimurugan - 2026பின்னர் தாம் பேசி முடிக்கும் போது, வழக்கம் போல் துரை முருகனின் அன்புச் சகோதரர் கதிர் ஆனந்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று இல்லாமல், கலைஞரின் மகனாகப் பேசித் தள்ளினார். அவரது பேச்சைக் கேட்ட தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அதிர்ச்சி முகங்களைக் கண்டுவிட்டு, பின்னர் தனது தவறை உணர்ந்து கொண்டு, திருத்திப் பேசினார் மு.க.ஸ்டாலின்.

சொந்த மகனை தம்பியாக்கிய மு.க.சுடாலினின் பேச்சு, வழக்கம் போல், துரைமுருகனுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.