குளிக்கச் சென்ற இளம்பெண்! நேர்ந்த விபரீதம்!

கிரைம் நியூஸ் தமிழகம் பொது தகவல்கள்
Screenshot_2020_0819_144257

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் உள்ள கோவில்மேட்டை சேர்ந்த குணசேகரன் – யுவராணி என்ற தம்பதியின் ஒரே வளர்ப்பு மகள் 18 வயதான ரெனி ஷெர்சியா கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கொரோனாவால் வீட்டில் இருந்த ரெனி சம்பவத்தன்று இரவு அலமாரியில் உள்ள மண்ணெண்ணெய் கேனை எடுக்க முயற்சித்தபோது அது தவறுதலாக இவர் மீது விழுந்து மண்ணெண்ணெய் முழுவதும் ரெனி மீது கொட்டியது.

இதனால் ரெனி குளிப்பதற்காக பாத்ரூமிற்கு சென்று வாட்டர் ஹீட்டர் ஸ்விட்சை போட்டுள்ளார்.

அப்போது திடீரென வாட்டர் ஹீட்டர் தீப்பற்றி எரிந்து ரெனி மீதும் தீ பரவியது.

இவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து கோத்தகிரி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.