
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச்சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்
ஏற்கனவே செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சிலை அவர் உருவத்தை சரியாக பிரதிபலிக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்ததையடுத்து புதிய சிலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த புதிய சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது




