கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிக்கு கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் – ராஜ அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி அருள் புரிந்தார்
கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தின் பரிவார தெய்வங்களாக வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிக்கு ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு, காலை முதல் இரவு பல்வேறு விஷேச சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, அஷ்டோத்திர நாமாவளி, ஷோடச உபசார பூஜைகள் மற்றும் மஹா தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக ராஜ அலங்காரத்தில் முருகன் பல்வேறு வண்ண மலர்களினாலும், பலவகை வண்ண நகைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீ முருகன் பொதுமக்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாரதனையில் கோபுர ஆரத்தி, கற்பூர ஆரத்திகள் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு முருகன் அருள் பெற்றனர்.
மேலும், இதற்காக முழு ஏற்பாடுகளை கோயிலின் ஆலய ஸ்தானிகர் வசந்த் சர்மா சிறப்பாக செய்திருந்தார்



