
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் திடீர் கைதால் பரபரப்பு.!
சர்க்கரை ஆலை முறைக்கேடு வழக்கில் முன்னாள் பாக்., பிரதமர் நவாஸ் ஷெரிப் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினர் மீது சவுத்ரி சர்க்கரை ஆலையின் பங்குகளை விற்பது மற்றும் வாங்குவதில் முறைக்கேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதில், நவாஸ் நேரடி தொடர்பில் இருந்தார் எனவும் கூறப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நவாஸை கைது செய்த லாகூர் போலீசார், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணை தலைவரும், நவாஸின் மகளும் ஆன மர்யம், மற்றும் அவரது உறவினர் யூசப் அப்பாஸ் மீது கட்சிக்கு சந்தேகத்திற்கு இடமாக பில்லியன் கணக்கில் பணப்பரிவர்தனை நிகழ்ந்ததாக ஆதாரங்களுடன் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நவாஸ்க்கு அந்நாட்டு நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பின், உடல்நலக்குறைவை சுட்டிக்காட்டிய அவருக்கு 15 நாட்கள் ஜாமின் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு போலியானது, எந்தவித முகாந்திரமும் இல்லை எனவும், ஒருநாள் கூட கைது செய்து சிறையில் அடைக்கக் கூடாது எனவும் நவாஸின் வழக்கறிஞர் வாதிட்டாலும், நீதிமன்றம் கேட்பதாக இல்லை.
இந்நிலையில், நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டு, லாகூர் பொறுப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.



