தடுப்பு மருந்திற்கு இந்தியாவின் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்: ரஷ்யா!

உலகம்
corona vaccine

கொரேனா தடுப்பு மருந்தை பெருமளவு தயாரிக்கும் திறமை இந்தியாவிடம் உள்ளதாக ரஷ்யா எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் ரஷ்யாவை சேர்ந்த செச்செநோவ் நகரில் உள்ளமாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி ரஷ்யாவின் கமாலேயா தேசிய மைக்ரோபயாலஜி ஆராய்ச்சி மையம் இணைந்து இந்த கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

அந்த தடுப்பு மருந்திற்கு ஸ்புட்னிக் -வி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூன்றாம் கட்ட சோதனை தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் தடுப்பு மருந்து தயாரிப்பிற்காக இந்தியாவின் பங்களிப்பை ரஷ்யா எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஸ்புட்னி வி தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நேரடி முதலீட்டு நிதியகத்தின் சி.இ.ஓ. கூறியது, ஸ்புட்னிக் வி தயாரிப்பிற்கு தாங்கள் பங்களிப்பு செய்ய தயார் என லத்தீன் அமெரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய நாடுகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

தற்போது நாங்கள் இந்தியாவின் பங்களிபை எதிர்பாக்கிறோம். இது போன்ற நோய் தடுப்பு மருந்தினை பெருமளவு தயாரிப்பதில் இந்தியா நல்ல திறன் கொண்ட நாடாகும் என்றார். முன்னதாக ஸ்புட்னிக் வேக்சின் மருந்து குறித்த அடிப்படை விவரங்களை ரஷ்யாவிடம் இந்தியா கேட்டுள்ளதாகவும் அதற்கான தூதரக பணிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.