பிரபல நடிகையின் தந்தை மறைவு! திரையுலகத்தினர் இரங்கல்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
saranya

பழம்பெரும் மலையாள பட இயக்குநரும் , நடிகை சரண்யா பொன்வண்ணன் தந்தையுமான ஏ.பி.ராஜ் காலமானார். அவருக்கு வயது 95.

தமிழ், மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் பல படங்களை இயக்கியவர் ஏ.பி.ராஜ் . 1929 ஆம் ஆண்டில் மதுரையில் பிறந்த ஏ.பி.ராஜ் 1961 ஆம் ஆண்டில் தனது மலையாள பிளாக்பஸ்டர் “காளியல்லா கல்யாணம்” மூலம் அறிமுகமானார்.

saranyas-father

தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். பின்னர் ஸ்ரீலங்காவுக்கு இடம் பெயர்ந்த அவர் அங்கு தங்கியிருந்த காலத்தில் 11 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். இவர் தயாரிப்பாளராகவும் வெற்றிகரமாக வலம் வந்துள்ளார்.

இந்நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். அவரின் இறுதி சடங்கு மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. அவரின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.