விரைவில் மின்சார ரயில்கள் இயக்கப்படும்: அமைச்சர்!

இந்தியா சற்றுமுன்
train electric

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மின்சார ரயில்கள் இயக்க அனுமதி வழங்க வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. இதனிடையே மும்பையில் மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

மக்கள் நெருக்கம் நிறைந்த மும்பையில் மக்கள் பயணத்திற்கு அதிகம் பயன்படுத்துவது மின்சார ரயில்களை தான். எனவே, இது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் மின்சார ரயில்களை இயக்குவது குறித்த அறிவிப்பு இன்னும் 2 நாட்களில் முடிவு செய்யப்படும் என்றும் மகாராஷ்டிர மாநில அமைச்சர் விஜய் வடேட்டிவார் தெரிவித்துள்ளார்.

மும்பையில் மின்சார ரயில் இயங்க தொடங்கினால் அதன் பின்னர் சென்னை, தில்லி, பெங்களூரு, கொல்கத்தா உள்பட முக்கிய நகரங்களிலும் மின்சார ரயில்கள் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.