
அயோத்தி தீர்ப்பு குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்த கருத்து :
ஸ்ரீ ராம ஜென்மபூமி தொடர்பாக பாரத மக்களின் உணர்வு, நம்பிக்கை, ஈடுபாடு ஆகியவற்றுக்கு நியாயம் தரக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு. இதனை ஆர்எஸ்எஸ் வரவேற்கிறது.
பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த வழக்கில் சட்டப்படியான கடைசி தீர்ப்பு வந்துள்ளது. நீண்ட நெடிய காலமாக நடந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லா பரிமாணங்களும் ஆராயப்பட்டுள்ளன. எல்லா பக்கங்களின் கருத்துகளும் விவாதங்களும் ஆதாரங்களும் மதிப்பிடப்பட்டு உள்ளன.
அயராமல் இந்த பிரச்சினை குறித்து ஆழ்ந்து ஆராய்ந்து, சத்தியம், நியாயம் இவற்றை உயர்த்திப் பிடித்து தீர்ப்பளித்த எல்லா நீதிபதிகளுக்கும் அனைத்து தரப்பு வழக்கறிஞர்களும் நாம் நன்றி கூறுகிறோம்! வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்!
இந்த நீண்ட முயற்சியில் பல விதமாக படித்தவர்களையும் உயிர்த் தியாகம் செய்தவர்களையும் நாங்கள் நன்றி உணர்வுடன் நினைவு கொள்கிறோம்!
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய மனநிலையையும் சகோதரத்துவத்தையும் வளர்க்க முயற்சி செய்த அரசுக்கும் சமுதாயத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறோம்!
மனதின் சமநிலை தடுமாறாமல் தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களின் பாராட்டுக்கு உரியவர்கள்!
இந்தத் தீர்ப்பை வெற்றி தோல்வி என்ற கோணத்தில் நாம் அணுகக்கூடாது! சத்தியத்தையும் நீதியையும் ஆழமாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட இந்த முடிவை தேசத்தின் அனைத்து சமூகங்களின் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்தை அளிப்பதாக நாம் பார்க்கவேண்டும்! பயன்படுத்த வேண்டும்!
சமநிலை தவறாமல், சட்டத்துக்கும் அரசியல் சாசனத்தின் வரம்புக்கு உட்பட்டு மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்!
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வதற்கான முயற்சியை அரசு துரிதமாக மேற்கொள்ளும் என்று நம்புகிறோம்!
இதுவரை நடந்த எல்லா விஷயங்களையும் மறந்து ஸ்ரீ ராம ஜென்ம பூமியில் ஒரு பிரம்மாண்டமான ஆலயம் கட்டுவதில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கடமை ஆற்றுவோம் என்று மோகன் பாகவத் தனது உரையில் குறிப்பிட்டார்!