கனவின் விளைவு: இப்படி கண்டால் கெடுதலின் அறிகுறிகள்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
dream-1

நாம், ஒரு போர் வீரனாக இருப்பதாகக் கனவு வந்தால், தற்போதையை உத்தியோகத்தை விட்டுவிட நேரிடும். தொழில் செய்வோர் நஷ்டப்பட நேரிடும். போர் நடப்பதாகக் கனவு கண்டால் ஏதேனும் சச்சரவு உண்டாகும்.

கனவில் மெழுகுவத்தி சுடர்விடுவதாகக் கண்டால் மகிழ்ச்சி ஏற்படும்.

வீட்டில் சுபகாரியங்கள் இனிதே நடைபெறும்

மலர்கள் பூத்துக் குலுங்குவதுபோல் கனவு வந்தால், நல்ல பலன்கள் கைகூடும். ஆனால், வாடிய மலர்களை கனவில் கண்டால், வியாதி உண்டாகும் என்பது குறிப்பு.

நாம் வர்ணம் பூசுவதாக கனவு காண்பது கெடுதல். ஆனால், வர்ணம் அடிக்கும் நபர்களைக் காண்பது நல்லது.

ஒருவர் வீணையை இசைக்க, நாம் கேட்டு ரசிப்பதுபோல் கனவு காண்பது நல்லது; சுப காரியங்கள் ஸித்திக்கும்.

கனவில் எதிரிகளைக் கண்டால், மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டுமாம்.

கனவில் வாடிப்போன பூக்களைக் கண்டால், வியாதி உண்டாகும். எனவே வருமுன் காப்பது நினைவுப் படுத்திக்கொள்ளவேண்டும்.

இஞ்சி கனவில் வந்தால், நோய்களால் பாதிப்பு ஏற்படக்கூடும்.

கனவு காண்பவர் வாய்விட்டு சத்தமிட்டு அழுவது போல் கனவுக் கண்டால் அவரது வாழ்க்கையில் சில இடையூறுகள் ஏற்படும்.

சீப்பு கனவில் வந்தால் வாழ்வில் சிக்கல்கள் உண்டாகும் என்னும் அர்த்தத்தைக் குறிக்கும்.

இடியுடன் கூடிய மழை பொழிவதை கனவில் பார்த்தால், உறவினர் விரோதிகளாக மாற நேரிடும்.

வித்தியாசமான மனிதர் அல்லது வித்தியாசமான பொருட்கள் கனவில் வந்தால், புதியவரை நம்ப வேண்டாம் என்னும் எச்சரிக்கையாம்.

குழந்தைகள் இறப்பது போல் கனவு வந்தால் அவருக்கு வர இருக்கும் பேராபத்தைக் குறிக்கும் எச்சரிக்கை.

இரும்பை எடுப்பது போல் கனவுக் கண்டால் மிகவும் கெடுதலான சம்பவத்தை நடப்பதைக் குறிக்கும்.

கீழே விழுவது போல கனவு கண்டால், பொருள் நஷ்டமடைய நேரிடும்.

கனவில் பசுவை விரட்டுவது போல் கண்டால் வியாதி உண்டாகும்.

கனவில் தேனீக்கள் கொட்டுவது போல் வந்தால் வீண் செலவுகள் உண்டாகும் என்பது அர்த்தம்.

நீங்கள் தனித்து உண்பதுபோல் கனவு வந்தால் தொழிலில் நஷ்டம் உண்டாகும்.

கனவில் காக்கை வந்தால், தொழிலில் அல்லது உத்தியோகத்தில் பாதிப்பு உண்டாகும்.

கனவில் பூனையை வந்தால் திடீர் நட்டம் ஏற்படும்.

எறும்புகளை கனவில் கண்டால் மனக் கஷ்டம்.

கனவில் தேரோட்டம், திருவிழாக்களைக் கண்டால், உறவினர் ஒருவரின் மரணச் செய்தியைக் வரலாம் என்னும் எச்சரிக்கையை உணர்த்தும்.

தோன்றும்…..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.