வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில்… அரங்கேறும் அராஜகம்!

Published:

agasteeswarar temple villiwakkam - 2026

சென்னை வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அகத்திய முனிவர் வந்து வழிபட்ட ஸ்தலம்.

இங்கு உள்ள புற்றில் தற்போது பால் ஊற்றினால் பால் அப்படியே ஒரு பைப் வைத்து கால்வாயில் வந்து கொட்டிவிடுகிறது. போய்க் கேட்ட போது பாம்பெல்லாம் பால் குடிக்காது, இனி இப்படித் தான் என்கின்றனர். அதே போல் கோவில் உள் பிராகாரத்தில் விளக்கு ஏற்றக் கூடாது, கோவில் வெளிப் பிராகாரத்தில் தான் ஏற்ற வேண்டும். கோவில் பாழாகி விடும் என்கின்றனர்.

பல வருடங்களாக என் தாத்தா காலத்திலிருந்து இங்கு கார்த்திகை சோம வாரங்களில் 108 விளக்குகள் ஏற்றுவது வழக்கம். இத்தனை வருடங்களாக பாழாகாத கோவில் இனி எப்படி பாழாகும் என்றால் நம் நம்பிக்கையை கேலி செய்வதைப் போல் management ல் உள்ளவர்கள் பேசுகின்றனர்.

இந்தக் கோவில் மட்டும் என்று இல்லை, இன்று நம் பல கோவில்களின் நிலமையும் இது தான். காளிகாம்பாள் கோவிலிலும் உள்ளே ஏற்றிக் கொண்டிருந்த விளக்குகளை இப்போது வெளியே தான் ஏற்ற வேண்டும் என்று கூறி எரியும் விளக்குகளை வெளியே தூக்கிப் போடுகின்றனர்.

நானும் பல மாதங்களாக பேசி வருகிறேன் எந்த பலனும் இல்லை. நம் கோவில்களின் தெய்வீக ஸாந்நித்தியம் கெடாமல் காக்க வேண்டியது நம் ஹிந்து ஒவ்வொருவரின் கடமை.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

பொறுப்புள்ளவர்கள் தலையிட்டு, நம் கோவில்களின் தெய்வீகத் தன்மை கெடாமல் மீண்டும் உயிர் பெற ஆவன செய்ய வேண்டும்.

  • ஸ்ரீதேவி ரமேஷ், வில்லிவாக்கம், சென்னை

Related articles

Recent articles

spot_img