திருமா.,வை வெறுப்பேத்த… திரௌபதி டீஷர்ட்டுடன் காயத்ரி ரகுராம் இலவச பட ப்ரமோஷன்!

சற்றுமுன்
gayathri raghuram - 2026

வெள்ளிக்கிழமை நேற்று திரௌபதி திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் வெளியான பெரும்பாலான தியேட்டர்களில் இளைஞர்கள் பட்டாளம் கூடி, படத்துக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்யும் விதமாக பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம், திரெளபதி படத்தின் டி-சர்ட்டை அணிந்து கொண்டு கலக்கலான போஸ் கொடுத்துள்ளார். ஸ்டைல் கூலிங்கிளாஸ், கறுப்பு கலர் ஜீன்ஸ் சகிதமாக காயத்ரி ரகுராம் கொடுத்துள்ள கலக்கல் போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

draupati teshirt - 2026

மேலும், காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் திரெளபதி படத்தில் நடித்த ரிச்சட்டிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண்கள் சம்பந்தப்பட்ட இந்த கதையில் நடித்ததற்கு நன்றி. இந்தக் காலத்தில் பெண்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்று அதில், பதிவிட்டுள்ளார்.

முன்னர் திருமாவளவனையும், விசிகவினரையும் நேரடியாக கருத்து மோதலில் தாக்கி வந்தார் காயத்ரி ரகுராம். அதனால் ஜனநாயக முறைப்படி, கருத்துச் சுதந்திரத்துக்கு மிகப் பெரும் ஆதரவையும் அனுமதியையும் அளித்தபடி, காயத்ரி ரகுராமின் டிவிட்டர் கணக்கைக் கூட, முடக்கினார்கள். இந்நிலையில் தற்போது திரெளபதி படத்திற்கு ப்ரீ புரோமோஷன் செய்துள்ளார் காயத்ரி ரகுராம்.

https://twitter.com/gayathriraguram/status/1233282962948386816

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.