பொறுமையின்மை மட்டும் காரணம் இல்லையாம்… யார் இந்த நீதிபதி முரளிதர்?

Published:

muralidhar - 2026

டெல்லி கலவரத்தில் என்னடா சம்பந்தம் இ ல்லாமல் பிஜேபி ஆட்களின் மீது மட்டும் வழக்கு பதிய உத்தரவு போடுகிறாரே யார் இந்த நீதிபதி முரளிதர் என்று பார்த்தால் கடைசியில் அவர் நம்முடைய திராவிட கூட்டத்தில் ஒருவர் தான் என்று தெரிந்து விட்டது.

நீதிபதி முரளிதர் தமிழ் நாட்டில் பிறந்து வளர்த்து படித்து 1984-1987 வரை சென்னை ஹைகோர்ட்டில் லாயராக இருந்து அப்படியே டெல்லிக்கு சென்று உச்ச நீதிமன்ற லாயராகி பிறகு நீதிபதியாக உயர்ந்தவர்.

judge muralidhar3 - 2026

இடதுசாரி சிந்தனை உடைய முரளிதர் போபா ல் விஷவாயு வழக்கு நர்மதா அணை வழக்கு என்று அரசுக்கு எதிரான வழக்குகளில் ஈடுபாடு கொண்டு வழக்காடியவர். பின்னர் மனித உரிமை கமிசனில் உறுப்பினராகிய பிறகு
அரசுக்கு எதிராகவே மனநிலை கொண்டவராக மாறியவர்.

2006 ல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று டெல்லி ஹைகோர்ட்டில் நீதிபதியாக பதவிக்கு வந்தவர். இவருடைய நீதி மாண்புக்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு பீமாகோரேகான் வழக்கில் சமந்தப்பட்ட அர்பன் நக்சல் கௌதம் நவலாகாவை மும்பை போலீஸ் கைது செய்து வீட்டு சிறையில் வைத்து இருந்ததை கேன்சல் செய்து வெளியில் விட்டவர்.

judge muralidhar2 - 2026

நீதிபதி முரளிதர் வழங்கிய தீர்ப்பில் மிக முக்கியமானது நாஸ்பவுண்டேசன் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஓரின சேர்க்கையை அதாவது ஹோமேசெக்ஸ் குற்றம் அல்ல என்று இந்திய மரபினை உடைத்து 2009ல் தீர்ப்பு வழங்கியவர் என்றால் இவர் எப்படி பட்டவர் என்று அறிந்து கொள்ளலாம்.

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

இந்திய அரசியலமைப்பு படி இபிகோ 377 பிரிவின் கீழ் ஹோமோசெக்ஸ் குற்றம் அத ற்கு 10 வருட தண்டனை உண்டு.ஆனால் அதை நியாயப்படுத்தி தீர்ப்பு வழங்கிய மாமேதைதான் நீதிபதி முரளிதர்.

இப்படிப்பட்ட நீதிபதி முரளிதர் டெல்லி கலவரங்கள் மீது கலவரத்தை நடத்தியவர்களை கண்டு கொள்ளாது பிஜேபி தலைவர்கள், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நடந்து வரும் போராட்டத்தை விலக்காவிட்டால் நாங்களே விலக்க வைப்போம் என்று கூறியதை வைத்து அவர்களை குற்றவாளிகளாக அறிவித்து வழக்கு பதிவு செய்ய தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

வழக்கமாக உயர் பதவியில் உள்ள ஒரு அரசு அதிகாரியை 3 வருடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் பணி புரிய வைத்து இருக்க மாட்டார்கள் ஆனால் நீதிபதி முரளிதர் 13 வருடங்களாக டெல்லி ஹைகோர்ட்டிலேயே தொடர்ந்து இருந்து இருக்கிறார்.

நீதிபதி முரளிதர் இடமாற்றம் பற்றி கடந்த ஜனவரி மாதமே கொலிஜியம் முடிவு எடுத்து விட்டது. இது பற்றிய செய்திகள் ஜனவரி 28ம் தேதியே வந்துள்ளது ஆனால் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் அவருடைய ஆதரவு வக்கீல்களை வைத்து ட்ரான்ஸ்பரை எதிர்த்து போராட வைத்துக் கொண்டு இருந்தார்.

ALSO READ:  அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

ஆனால் அது முடியாமல் போகவே வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டு டில்லி கலவரங்களை முன்வைத்து அரசாங்கத்தையும் பிஜேபி தலைவர்களையும் குற்றவாளிகளாக மாற்றிவிட்டு தன்னுடைய இடமாற்றத்திறகு தன்னுடைய தீர்ப்பை வைத்து பிஜேபி அரசாங்கம் பழி வாங்குகிறது என்று மற்றவர்களுக்கு
தெரிய வைத்து இருக்கிறார்..

  • E.Thirunavukkarasu

Related articles

Recent articles

spot_img