பிரதம மந்திரி விவசாயக் கடன் குறித்த விளக்க முகாம்!

Published:

sbi sct - 2026

செங்கோட்டை ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா வங்கியில் பிரதம மந்திரி விவசாய கடன் குறித்த விளக்க முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வைத்து பிரதம மந்திரி விவசாய கடன் குறித்த விளக்க முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கிளை மேலாளர் அஜீத்ஆன்டணி தலைமைதாங்கினார். துணை மேலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மத்திய அரசு விவசாயிகளுக்காக அறிவித்துள்ள கடன்கள் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி விவசாய கடன் அட்டை வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் மூலம் சுமார் 1லட்சத்து அறுபது ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்படும் இந்தக் கடனுக்கு 9 சதவீம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் கடன் பெற்ற விவசாயிகள் ஒரு வருடத்திற்குள்ளாக கட்டி முடித்தால் 5 சதவீத வட்டியை மானியமாக தள்ளுபடி செய்யப்படும். இந்தக் கடன் தொகையினை விவசாயிகள் கொடுக்க வேண்டிய ஆவணங்கள் அடங்கல், பட்டா, சிட்டா, வில்லங்க சான்றுகள் அவசியம்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

மேலும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு ரூபாய் 12மட்டும் செலுத்தும் விவசாயிகளுக்கு விபத்து காப்பீடாக ரூபாய் 2 லட்சமும், பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.330 கட்டினால் ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடாக ரூ.2 லட்சமும் வழங்கப்படும்

இது குறித்த வீடியோ காணொளி விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இதில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் கிளை துணை மேலாளர் அமிதேச்குமார் நன்றி கூறினார்.

Related articles

Recent articles

spot_img