இலங்கை தாதா அங்கட லொக்கா விவகாரம்: மதுரையில் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை!

Published:

madurai-airport1
madurai-airport1

மதுரை: மதுரை விமான நிலையத்தில் சிபிசிஐடி டி.எஸ்.பி பரமசாமி, ஆய்வாளர் கவிதா தலைமையில் நான்கு பேர் கொண்ட போலீசார் இலங்கை தாதா அங்கட லொக்கா குறித்து குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் இலங்கை உலக தாதாவான அங்க குறித்த வெளிநாட்டு பயணங்கள் வருகை ஆகியவை குறித்து சி.பி.சி ஐடி போலீஸார் மதுரை விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

madurai-airport2
madurai-airport2

சிபிசிஐடி டி.எஸ்.பி பரமசாமி, ஆய்வாளர் கவிதா தலைமையில் போலீஸார் கோவையிலிருந்து மதுரை விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற துறை அதிகாரிகளிடம் அங்கட லொக்கா குறித்து காலை 10 மணி முதல் 2 1/2 மணி நேரம் விசாரணை செய்தனர்.

மதுரையில் அங்கொடா லொக்கா உடல் எரிக்கப்பட்ட விவகாரம் குறித்து, சிவகாமி சுந்தரி பயன்படுத்திய காரின் ஓட்டுனர் மற்றும் நண்பர்களிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

madurai-airport
madurai-airport

இலங்கையை சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன் அங்கொடா லொக்காவின் உடல் மதுரையில் எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அவருக்கு உதவியதாக பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தங்கியிருந்த மதுரை ரயிலார்நகர் பகுதியில் உள்ள வீடுகளில் விசாரணை நடத்திய நிலையில் அவரது செல்போன் தொடர்புகளை ஆய்வு மேற்கொண்டு அதனடிப்படையில் சிவகாமி சுந்தரியுடன் செல்போன் தொடர்பில் இருந்த நபர்கள் மற்றும் அண்டை வீட்டார்களிடம் சிபிசிஐடி போலிசார் இன்று விசாரணை நடத்தினர்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

இதேபோல் விசாரணையின் அடுத்தகட்டமாக சிவகாமி சுந்தரியின் வங்கி கணக்கு பரிமாற்றம் தொடர்பாக வங்கிகளிலும் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img