மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவி தற்கொலை: ப்ளூவேல் காரணமா?

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் திருச்சி

பொறியியல் கல்லூரி மாணவி அதிகாலை மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இது ப்ளூவேல் கேம் மாயையால் ஏற்பட்டதா, அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் கொந்தகையை சேர்ந்த பரணிதாஸ் , தமயந்தி மகளான தாரணி  திண்டுக்கல் – பழநி சாலையில் உள்ள PSNA பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு BE படித்து வருகிறார்.  மாணவி தாரணி அதிகாலை விடுதி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்லில் இருந்து ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இவர் எதனால் அதிகாலை மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்தும், ஒருவேளை புளுவேல் கேம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்றும் இவரது மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் இரவு 12 மணி வரை பெற்றோருடன் செல்போனில் பேசிய நிலையில் அதிகாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.