கிரிக்கெட் வீரர் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு!

இந்தியா சற்றுமுன் விளையாட்டு
sekar-kavli

முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான ஷேகர் என்பவர் 250 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிர மாநில கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேகர் கவ்லி (45) பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர். மகாராஷ்டிர அணியின் சார்பில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய இவர், 2 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

sekar-cricketer

இவர் மகாராஷ்டிராவின் 23 வயதிற்குட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளராகவும், உடற்தகுதி பயிற்சியாளராகவும் இருந்து வந்தார்.

இவர் தனது நண்பர்களுடன் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் மலையேற்றம் சென்றிருந்தார்.

nasik

அப்போது 250 அடி பள்ளத்தில் அவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய ஐகாட்புரி காவல்துறையினர், பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

அவரது மறைவிற்கு மும்பை கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த சோகமான தருமணத்தில் அவரது குடும்பத்திற்கு மகாராஷ்டிர கிரிக்கெட் வாரியம் துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.