பிரச்னையை ஏற்படுத்த… அதிமுக.,வையும் சேர்த்துக் கொண்ட திமுக., பிரமுகர்கள்! சாயம் வெளுத்தது அரியநாச்சி கிராமத்தில்!

உரத்த சிந்தனை சற்றுமுன் சென்னை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
hraja poster - 2026

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த அரியநாச்சி கிராமத்தில் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது!

சேதமடைந்த இந்தத் திருக்கோவிலுக்கு திருப்பணி செய்வது தொடர்பாக இரண்டு தரப்பினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது! இதையடுத்து கோவில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது!

இந்த நிலையில் கிராம மக்களை ஒருங்கிணைத்து இந்து அமைப்புகளுடன் பேசி, ஹெச்.ராஜா இந்த வருடம் விநாயகர் சிலைகளை அமைத்து பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்து வந்தார்! இதற்கு கிராம மக்கள் பலர் வரவேற்பு தெரிவித்து கட்சி பாகுபாடின்றி அவரை வரவேற்று போஸ்டர்களை ஒட்டி இருந்தனர்!

இது பிடிக்காத வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்கும் நோக்கத்தில் ஹெச்.ராஜாவுக்கு எதிராக அதிமுக பெயரையும் திமுக பெயரையும் சேர்த்து போஸ்டர் ஒட்டினர்!

இதனைக் கண்ட ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்து கடுமையாக எதிர்த்தனர் விநாயகர் சதுர்த்தி விழா, இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களால் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; ஆனால் ஏதோ யாரோ தெருவில் ஒட்டிய போஸ்டரை வைத்து தமிழக ஊடகங்கள் போலியாக செய்தியைப் பரப்பி, ஊரைப் பிளவுபடுத்தி வருகின்றனர் என்றும், வேற்று மதத்தைச் சேர்ந்த திமுகவினர் இருவர் தான் இதற்குக் காரணம் என்றும் குற்றம் சுமத்தினர்.

நாளை அனைத்து ஊடகங்களும் எங்கள் கிராமத்துக்கு நேரடியாக வந்து பாருங்கள் என்று அரியநாச்சி கிராம மக்கள் ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.