11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! தந்தையும் சகோதரனும் சேர்ந்து 2 வருடங்களாக பாலியல் வன்கொடுமை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
steped-father

விருதுநகர் பாறைப்பட்டியை சேர்ந்த மகேந்திரன்-தமிழ்செல்விக்கு திருமணம் முடிந்து திருமணம் இல்லை. இதனால் இத்தம்பதி கடந்த 11 ஆண்டுக்கு முன்னர் தனியார் ஆசிரமம் ஒன்றில் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.

குழந்தையும் சிறு வயது முதலே பெற்றோர் மீது அளவுகடந்த பாசத்துடன் அவர்களுடன் வளர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் அச்சிறுக்கு திருடிரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுமியும் சோகமாக இருந்ததால் தாயார் கேட்டுள்ளார்.

kamaraj

அப்போது 2 ஆண்டுகளாக தனக்கு நடந்த கொடூரம் குறித்து அழுதுக்கொண்டே சிறுமி தாயாரிடம் கூறியுள்ளார். வளர்ப்பு தந்தையான மகேந்திரன், தத்தெடுத்து வளர்த்து வந்த 11 வயது மகளை கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

vankodumai 1

அதேபோல் சிறுமிக்கு அண்ணன் முறைகொண்ட அதாவது மகேந்திரனின் சகோதரன் மகன் காமராஜ் பெருமாள் சிறுமியை ஓராண்டாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதை யாரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருவரும் இக்கொடூரத்தை நிகழ்த்தி வந்துள்ளனர்.

இதனைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் வளர்ப்பு தாய், விருதுநகர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தந்தை மகேந்திரன் மற்றும் காமராஜ் பெருமாள் ஆகிய இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.