
சபரிமலை செல்லும் தென்காசி விருதுநகர் சிவகங்கை மாவட்ட ஐயப்ப பக்தர்களே உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி யான் செய்தி ஐயப்ப பக்தர்கள் மற்றும் பயணிகள் நலன் கருதி எர்ணாகுளம் முதல் காரைக்குடி வரை செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் வழியாக சபரிமலை சிறப்பு ரயில் ஐந்து முறை வியாழன் தோரும் இயக்கப்படுகிறது.
எர்ணாகுளம்-காரைக்குடி சிறப்பு இரயில்(06019)வியாழன்தோறும் 30.11.23 முதல் 28.12.23 வரை(5 சேவைகள் இயக்க ப்படுகிறது.
எர்ணாகுளத்தில் அதிகாலை 04:45க்கு கிளம்பி, புனலூர் காலை 10:45 மணி, தென்மலை பகல் 11:43, ஆரியங்காவு மதியம் 12:25 மணி,
செங்கோட்டை மதியம் 13:15 மணி, ராஜபாளையம் மதியம் 14:40 மணி, காரைக்குடி இரவு 19:00 மணிக்கு சென்று சேரும்.
மறுமார்கத்தில், காரைக்குடி-எர்ணாகுளம் சிறப்பு இரயில்(06020)வியாழன்தோறும் 30.11.23 முதல் 28.12.23 வரை 5 சேவைகள் காரைக்குடியில் நள்ளிரவு 23:30க்கு கிளம்பி, விருதுநகர் வழி ராஜபாளையம் நள்ளிரவு(வெள்ளி) 03:00 மணி,செங்கோட்டை அதிகாலை 04:20 மணி, ஆரியங்காவு அதிகாலை 04:46மணி, தென்மலை அதிகாலை 05:15 மணி, புனலூர் காலை 06:55 மணி, எர்ணாகுளம் பகல் 11:40 மணிக்கு சென்று சேரும்,
இந்த ரயில் மூலம் ஐயப்பன் படை வீடு கோவில்களான
அச்சன்கோவில் ஆரியங்காவு கோவில்
தென்மலை அருகில் உள்ள குளத்துப்புழா கோவில்
புனலூர்- பம்பை, எருமேலி & சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லலாம்.
சபரிமலை பயணிக்கும் ஐயப்ப சுவாமிமார்கள் இந்த சபரி சிறப்பு இரயில் சேவையைப் பயன்படுத்தி சபரிமலை யாத்திரையை நிறைவாக மேற்கொள்ளலாம்.
கடந்த ஆண்டு சபரிமலை சீசனுக்கு எர்ணாகுளம் தாம்பரம் இடையே புனலூர் செங்கோட்டை ராஜபாளையம் வழியாக சிறப்பு முறையில் திங்கட்கிழமை தோறும் இயக்கப்பட்டது இந்த ரயிலுக்கு மிக நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த ஆண்டு சபரிமலை சீசனுக்கு இயக்கப்படும் என பக்தர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர் .
ஆனால் தென்னக ரயில்வே தற்போது எர்ணாகுளம் வேளாங்கண்ணி இடையே சனி மற்றும் திங்கட்கிழமையில் விரைவு ரயில் இயக்கி வருவதால் தற்போது வியாழக்கிழமை தோறும் காரைக்குடி எர்ணாகுளம் காரைக்குடி இடையே சிறப்புரையில் இயக்கம் முன்வந்துள்ளது.
இது பக்தர்களுடைய பெரும் வரவேற்பு பெற்றுள்ளது பக்தர்கள் இந்த ரயிலை அதிக அளவில் பயன்படுத்தினால் நிரந்தர ரயிலாக தினசரி எர்ணாகுளம் ராமேஸ்வரம் இடையே இயக்க வாய்ப்பு உள்ளது.





