ஆரோக்கிய சமையல்: முளைகட்டிய பயிறு இடியாப்பம்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
mulaikattiya-payaru-idiyappam

முளைகட்டிய பயிறு இடியாப்பம்

தேவையானவை:
முளைகட்டிய பயறு – ஒரு கப்,
இடியாப்ப மாவு – 2 கப்,
பெரிய வெங்காயம், தக்காளி, குட மிளகாய் (சிறியது) – தலா ஒன்று (நறுக்கிக்கொள்ளவும்),
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்த மல்லித் தழை, கடுகு, கறிவேப்பிலை,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எண் ணெய் – 4 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
இடியாப்பமாவை வெந்நீர் விட்டுப் பிசைந்து, இட்லித்தட்டில் இடியாப்பமாக பிழிந்து, ஆவியில் வேக வைக்கவும். சிறிது ஆறிய பிறகு உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கி… முளைகட்டிய பயறு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, குட மிளகாயும் சேர்த்து, கால் டம்ளர் நீர் விட்டு, 5 நிமிடம் மூடிவிடவும். தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்துவிட வும். இதனுடன் உதிர்த்த இடியாப் பத்தைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.