மக்களின் கோஷம் அல்ல, அவை திமுக.,வின் அரசியல் கோஷங்கள்!

அடடே... அப்படியா? லைஃப் ஸ்டைல்
stalin-hindi1
stalin-hindi1

இந்தி வேண்டாம், குலக்கல்வி என்பது எல்லாம் மக்கள் கோஷம் அல்ல, அவை திமுகவின் அரசியல் கோஷங்கள் என்று கருத்துப் பதிவிட்டிருக்கிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி.

திமுக., எம்பி., கனிமொழி அண்மையில் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தம்மிடம், ஹிந்தி தெரியவில்லை எனில் நீங்கள் இந்தியரா என்று கேள்வி கேட்டதாகக் குறிப்பிட்டு ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து, மீண்டும் மொழி அரசியலைக் கையில் எடுத்துள்ள திமுக., மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதற்காகக் கூறி, சினிமா பிரபலங்கள் மூலம் டீ சர்ட்டில் ‘hindi theriyathu podaa ” என ஹிந்தி தெரியாது போடா…என அச்சடித்து இணையதளங்களில் பதிவிட்டு பரப்பி வருகிறது.

இதற்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் மாணவர்களின் எதிர்காலத்தை சிதறடிக்கும் திமுக.,வின் உள்நோக்க அரசியலுக்கு பல்வேறு தரப்பினரும் இப்போது கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

அவர்களின் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அவரது மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி ஆகியோர் சமூகத் தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஷ்யாம் கிருஷ்ணசாமி, தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து…

முதற்கட்டமாக புதிய கல்வி கொள்கை – மும்மொழிக் கொள்கையை ஆதரித்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் 200 ஒன்றியகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்தி வேண்டாம், குலக்கல்வி என்பது எல்லாம் மக்கள் கோஷம் அல்ல, அவை திமுகவின் அரசியல் கோஷங்கள்!

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.