ஆரோக்கிய சமையல்: முளைக்கட்டிய பயிறு பயாசம்!

Published:

mulaikattiya-payaru-payasam

முளைகட்டிய பயிறு பாயசம்

தேவையானவை:
முளைகட்டிய பயறு. – ஒரு கப்,
வெல்லம் – 2 கப்,
நெய். – 4 டீஸ்பூன்,
உடைத்த முந்திரி, உடைத்த பாதாம் – தலா 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள். – ஒரு சிட்டிகை.

செய்முறை:
பாதாம், முந்திரியை ஊற வைத்து, தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு முளைகட்டிய பயறை வறுத்து, நீர் சேர்த்து, குழையாமல் வேகவிடவும். வெந்ததும் துருவிய வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லமும், பருப்பும் கலந்ததும், அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதைச் சேர்த்து… இரண்டு கொதி வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.

Related articles

Recent articles

spot_img