அன்னை மொழி காப்போம் அனைத்து மொழியும் கற்போம்: விஜய் பிரபாகரன் டி-ஷர்ட் அணிந்து ட்விட்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
vijay-prabhakaran

இந்தி மொழிக்கு ஆதரவான தனது கருத்தை பதிவிட்டுள்ளார் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்தி பயிற்றுவிப்பதற்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேபோல்்் திரையுலக பிரபலங்களும் மற்றும் எல்லா மொழியையும் கற்றால் ஏற்படும் நன்மையும் பயனை அறிந்தவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘ஹிந்தி தெரியாது போடா’ மற்றும் ‘ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ போன்ற வாசகங்கள் கொண்ட டீசர்ட் அணிந்து திரையுலக பிரமுகர்கள் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இதனை எதிர் கட்சிகளும் ஆதரித்தன.
இந்நிலையில், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், ‘அன்னை மொழி காப்போம், அனைத்து மொழியும் கற்போம்.

தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து இந்தி மொழிக்கு ஆதரவாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.