பொள்ளாச்சி விவகாரத்தை சிபிஐ., வசம் ஏன் இன்னும் ஒப்படைக்கவில்லை?!

Published:

12 Aug 05 High court - 2026

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ வசம் ஏன் இன்னும் ஒப்படைக்கவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் முறைகேடு விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டதாகக் கூறியிருந்தது. ஆனால் சிபிஐ விசாரணைக்கு இன்னும் ஒப்படைக்கப் படவில்லை என்று கூறப்படும் நிலையில் இது தொடர்பாக நீதிமன்றம் அரசுக்கு சில கேள்விகளை எழுப்பியது.

அதற்கு, சிபிஐ தரப்பிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வராததால் சிபிசிஐடி விசாரணை நடத்தப் பட்டு வருகிறது என்றும்,  சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து ஆதாரங்களை திரட்டி வருகின்றனர் என்றும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

சிபிஐ விசாரணையை கண்காணிக்க கோரும் வழக்கில் சிபிஐ இயக்குநர், இணை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img