புனித ஹஜ் பயணத்திற்கு தங்கள் நாட்டவர்களை சவுதி அனுமதிக்க மறுப்பதாக கத்தார் குற்றம் சாட்டி உள்ளது. ஹஜ் பயணம் மேற்கொள்ள கத்தார் நாட்டிலிருந்து ஆயிரத்து 200 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
ஆனால் அவர்களுக்கு விசா வழங்க சவுதி அரசு மறுத்து விட்டது. ஹஜ் பயணம் மேற்கொள்ளும் கத்தார் நாட்டின் செயலிகளை சவுதி முடக்கி வைத்துள்ளதாக கத்தார் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அப்துல்லா அல் காபி ((Abdullah al kafi)) தெரிவித்துள்ளார்.
கடந்த முறை ஹஜ் பயணம் வந்த கத்தார் நாட்டினர் சவுதியிலேயே தங்கி வன்முறைகளில் ஈடுபடுவதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.




