இலங்கை- பூகொடையில் இன்று மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

bombblastsrilanka - 2026

இலங்கையில் இன்று மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. வியாழன் இன்று காலை பூகொடை பகுதியில் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக இலங்கை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பூகொடை பகுதியில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டடத்துக்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். அதன் பின்னர் முழுவிவரம் தெரியவரும் என்று கூறப் படுகிறது.

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பின்னர், வெடிகுண்டுகளுடன் கூடிய வாகனங்கள், லாரி, இரு சக்கர வாகனங்கள் என போலீஸாரால் கண்டறியப் பட்டு, வெடிகுண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.