பாலியல் வியாதிகள் நீங்க அமுக்கரா லேகியம்
அமுக்கரா கிழங்கு -50 கிராம்
பூமி சர்க்கரை கிழங்கு -50 கிராம்
நிலப்பனங்கிழங்கு -50 கிராம்
கசகசா -50 கிராம்
பாதாம் பருப்பு -50 கிராம்
அக்ரோட் பருப்பு -50 கிராம்
பேரீச்சம் பழம் –50 கிராம்
திராட்சைப்பழம் -50 கிராம்
மேற்கண்ட சரக்குகளை பசும்பால் விட்டு நன்றாக மைய அரைத்துக்கொள்ளவும்.
கற்கண்டு – 250 கிராம்
பசும்பால் -1/2 லிட்டர்
இரண்டையும் ஒன்றாகக் கலந்து அடுப்பேற்றி சிறுதீயாய் எரிக்கவும். பாகுபதத்தில் மேற்படி அரைத்து வைத்துள்ள சரக்குகளைப் போட்டுக் கிண்டி இறக்கவும். 200 கிராம் நெய்யை உருக்கி லேகியத்துடன் சேர்த்துக் கிளறி பத்திரப்படுத்தவும். வெட்டை சூடு, அதிபோகம், சுய இன்பம், பாலியல் வியாதிகள் போன்றவற்றில் நலிந்துபோன உடலைத் தேற்றும், உறுப்புத் தளர்ச்சியும் நீங்கும். இரவு உணவுக்குப்பின் 5 முதல் 10 கிராம் வரை பாலுடன் சாப்பிடவும்