
கர்நாடகா பா.ஜ.க அரசு புதிதாக கட்டப்பட்ட பாலத்திற்கு சாவர்க்கரின் பெயரை முதல்வர் எடியூரப்பா சூட்டுகிறார். இதனை பொறுக்காத காங்கிரஸ் மற்றும்JDS கட்சிகள் கர்நாடகாவில் எத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்கள் இருக்க இவர் பெயரை எப்படி சூட்டலாம் என்று கேட்க, கர்நாடகா BJP செய்தி தொடர்பாளர் பிரகாஷ், இந்திரா உணவகம், ராஜிவ்காந்தி மருத்துவமனை இவையெல்லாம் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பியதுடன், சாவர்க்கர் தான் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றிலேயே அதிக தண்டனை பெற்றவீரர் என்றார்.
திப்பு சுல்தானுக்கு ஜெயந்தி கொண்டாடும் கூட்டத்திற்கு சிங்கத்தின் கர்ஜனை தெரிய வாய்ப்பில்லை தான்! ஆனால், அந்தமான் சிறை அதிகாரிகளில் மிக பயங்கரமானவன் டேவிட் பெரி, சாவர்க்கர் தண்டனைபெற்று அந்தமான் சிறை சென்ற பொழுது , அவன் சொன்னானாம், “வெல்கம் மிஸ்டர் சாவர்க்கர், சரியாக 50 ஆண்டுகள் கழித்து உங்களை விடுதலை செய்வோம்” என்று. அதற்கு சாவர்க்கர் சொன்னாராம், “மிஸ்டர் பெரி உங்களுக்கு அடுத்த 50 ஆண்டுகள் நீங்கள் இந்த நாட்டை ஆள்வீர்கள் என்று எந்த நம்பிக்கையில் சொல்கிறீர்கள்”, என்று. எவ்வளவு நம்பிக்கை சுதந்திர போராட்டத்தின் மீது.
காந்தி கொலை பழி இவர் மீது சுமத்தப்பட்டபோது, இவரது சொத்துக்களை நேரு பிடுங்கி தெருவில் நிறுத்தினார். பின் நிரபராதி என்று நிரூபித்தவுடன் கூட சொத்தை தரவில்லை அரசு. “உங்கள் சொத்தை தரவில்லையே”, என்று நிருபர்கள் கேட்டபோது, “நாடே கையில் வந்துவிட்டது, இந்த வீடு என்ன பெரிய சொத்து? போனால் போகட்டும்”, என்றார், அப்படியே போனாலும் தேசத்திற்கு தானே போகிறது. எவ்வளவு தேசபக்தி தேசத்தின் மீது.
இன்று சாவர்க்கரின் 137 வது பிறந்தநாள்.