
உலக அளவில் மூன்றரை லட்சம் பேருக்கும் அதிகமானோரைக் கொன்று தீர்த்துள்ளது கொலைகாரக் கொரோனா.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57,88,782ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,97,593ஆக உயர்ந்துள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,57,425ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767லிருந்து 1,58,333ஆக உயர்வு கண்டுள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64,426லிருந்து 67,692ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,337லிருந்து 4,531ஆக அதிகரித்துள்ளது… என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னையில் அண்ணாநகர் மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் 6 மண்டலங்களில் பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ராயபுரம் – 2252 பேர், கோடம்பாக்கம் – 1559 பேர், திரு.வி.க நகர் – 1325 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். தேனாம்பேட்டை – 1317 பேர், தண்டையார்பேட்டை – 1262 பேர், அண்ணாநகர் – 1046 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
சென்னையில் அண்ணாநகர் மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது. சென்னையில் 6 மண்டலங்களில் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.